விஜய் பட நடிகையின் கணவர் தற்கொலை!

அக்டோபர் 26, 2019 390

வேலூர் (26 அக் 2019): விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்த நடிகை ராகவியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நடிகை ராகவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு மருதுபாண்டி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் மற்றும் சில படங்களில் நடித்தவர். சின்னத்திரையில் திருமதி செல்வம், மகாலட்சுமி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர். இவரது கணவர் சசிகுமார் கடன் பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பின்பு இது குறித்து விசாரித்த போலீஸார், நடிகை ராகவிக்கு தகவல் கொடுத்தனர். பின்பு வந்து பார்த்த ராகவி தனது கணவர் தான் என்று அடையாளம் கூறினார். இது பற்றி விசாரித்த போது, சசிகுமார், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்தார். கடன்சுமை காரணமாக, இவர் வேலை பார்த்த ஸ்டூடியோவில் இருந்த கேமராவை எடுத்து அடகு வைத்து விட்டதாக சொல்கின்றனர். மேலும் அவருடன் வேலை பார்க்கும் மகேஷ் என்பவருக்கும் சசிகுமாருக்கும் தொழில் ரீதியாக பிரச்னை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதோடு மகேஷ் என்பவர் சசிகுமாரை பற்றி அவதூறு பரப்பியதாகவும் கூறுகின்றனர். இதனால் எனது கணவர் இறந்து இருக்கலாம் என்று ராகவி போலீசில் கூறியுள்ளார். இதனையடுத்து சசிகுமாரின் மரணம் தற்கொலையா இல்லை கொலையா என்று விசாரித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...