பிரபல திரைப்பட நடிகர் விபத்தில் மரணம்!

அக்டோபர் 29, 2019 376

சென்னை (29 அக் 2019): பிரபல திரைப்பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழந்தார்.

புழல்’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் மனோ (வயது 37). தனியார் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் டான்சராகவும் பிரபலமானவர். மேலும் பல படங்களிலும் நடித்து உள்ளார். மேடை நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.

இவர் சென்னை கொரட்டூர், பாபாநகர் 10-வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி லிவியா. கடந்த 27-ந்தேதி இரவு மனோ மனைவியுடன் காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது மனைவி லிவியா பலத்த காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த லிவியாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...