நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு? - அஜீத் ரசிகர் கைது!

அக்டோபர் 29, 2019 280

சென்னை (29 அக் 2019): நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த அஜீத் ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த போன் காலில் பேசிய மர்ம நபர், விஜய் வீட்டில் குண்டு வைக்கப் பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று மட்டும் கூறிவிட்டு உடனே போனை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் உடனடியாக நீலாங்கரை, சாலிகிராமத்தில் இருக்கும் விஜய் வீடு மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது திருமண மண்டபம் ஆகிய 3 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது பின்னர் தெரியவந்தது.

இந்நிலையில் மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அந்த மர்ம நபர் போரூர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் என்றும், அஜித் ரசிகராகிய அவர் போதையில் 'பிகில்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தீபாவளிக்கு வெளியான விஜய் நடித்த பிகில் படம் வசூலில் சாதனை புரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...