கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை முகத்தில் விழுந்த குத்து - கதறிய நடிகை!

அக்டோபர் 30, 2019 390

மலப்புரம் (30 அக் 2019): கேரளாவில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை நூரின் ஷெரிபுக்கு அவரது பாதுகாப்பாளராலேயே முகத்தில் குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றின் திறப்பு விழாவிற்கு ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை நூரின் ஷெரீப் அழைக்கப்பட்டிருந்தார். அவரது வருகைக்காக ஏராளமான ரசிகர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நடிகை நூரின் ஷெரிப் கடையின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு செல்வதற்காக காரில் இருந்து இறங்கி கூட்டத்திற்குள் புகுந்து நடந்து சென்றார். அபோது ரசிகர்கள் அவரிடம் கைகுலுக்குவதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி ஏற்பட்டது.

நடிகையை பாதுகாப்பாக மேடைக்கு அழைத்து செல்ல கருப்பு சட்டை அணிந்த 10 க்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பணியில் இருந்தனர். அப்போது மேடைக்கு அருகில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை மீறி நடிகை நூரின் மேடையில் ஏறி முகத்தை பொத்தியபடியே ஓ வென கதறி அழுதார்.

நடிகை நூரின் மூக்கில் யாரோ ஒரு ரசிகர் குத்திவிட்டதால் அவர் வேதனையில் துடிப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மேடையில் அறிவித்தார்.

ஆனால் வீடியோவை ஆராய்ந்தபோது கூட்டத்தில் நூரினை தாக்கியது அவரை பாதுகப்பாக அழைத்துச் சென்ற ஜிம்பாய் என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

கூட்டத்தினர் முண்டியடித்த போது அவர்களை தடுக்க முயன்று தலையை உதறிய போது அவரது தலை நடிகை நூரின் முகத்தில் பலமாக மோதியதாகவும் அடி விழுந்த வேகத்தில் தன்னை தாக்கியது யார் ? என்பதை நடிகையால் யூகிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...