அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கும் பட தலைப்பு சங்கி!

அக்டோபர் 31, 2019 373

மும்பை (31 அக் 2019): இயக்குநர் அட்லி பிகில் படத்திற்கு பிறகு இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் பிகில் படம் வசூலில் பெரிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்து ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளார். பல வருடங்களாக ஷாருக்கான் ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் அதற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வேஸ்ட்டாகி வருகிறது.

இந்நிலையில் தனக்கு ஒரு நல்ல வெற்றியை அட்லி கொடுப்பார் என்கிற நம்பிக்கையில் ஷருக்கும் அட்லியும் ஒன்றாக இணைந்து படம் பணிபுரிய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் படத்தின் பெயர் சங்கி என தகவல் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. தற்போது அந்த செய்தி இந்தியளவில் ட்ரெண்டாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...