கூட்டமில்லை - பிகில் காட்சிகள் ரத்து!

அக்டோபர் 31, 2019 473

சென்னை (31 அக் 2019): பிகில் படத்துக்கு கூட்டம் இல்லாததால் சில திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி இந்த படம் உலகமெங்கும் ரிலீசானது. வெளியான முதல் 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை பிகில் படம் ஈட்டியதாக தகவல்கள் கூறப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியில் படம் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், படம் வெளியான ஏழு நாட்களில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கில் பிகிலின் மதிய காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் குறைந்தபட்சம் 20 பேர் இருந்தால் மட்டுமே படம் திரையிடப்படும். ஆனால் பிகில் படத்துக்கு போதுமான கூட்டம் இல்லாததால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளிலும் இந்த நிலைதானாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...