திருமணத்திற்குப் பின் - கண்ணீர் விட்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்!

நவம்பர் 01, 2019 841

சென்னை (01 நவ 2019): தனது திடீர் திருமணம் குறித்தும் அதன் காரணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

அனிதாவின் பவ்யமான அழகு தான் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்து புகழ் பெற்றார். அவ்வளவு தான் அடுத்தடுத்த இவரின் பேட்டிகள் யூடியூப்பில் ஹிட் அடிக்க தொடங்கியது. எந்த பக்கம் திரும்பினாலும் அனிதா அனிதா ஹாஷ்டேக்குகள் தான்.

இப்போது வெளியான சூர்யாவின் காப்பான் படத்திலும் கூட அனிதாவின் முகம் தான். இப்படி பீக்கில் இருந்த டைம்மில் அனிதாவிற்கு திடீரென்று திருமணம் நடைப்பெற்றது.

திருமணம் குறித்தும் அவரது கணவர் குறித்து ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு அனிதாவை விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில் அவரது திருமணம் குறித்து விளக்கம் அளித்துள்ள அனிதா சம்பத், இது காதல் திருமணம் என்றும் கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும், விமர்சனங்களை நான் பார்ப்பதில்லை, எனக்கு பிடித்தவரை கை பிடித்துள்ளேன். விமர்சனங்களுக்கு பயந்து இவரை நான் கை விட்டால் இதை விட முட்டாள் தனம் வேறு இருக்க முடியாது" என்று கண்ணீருடன் அவரது உண்மை காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...