ரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது!

நவம்பர் 02, 2019 233

புதுடெல்லி (02 நவ 2019): நடிகர் ரஜினிக்கு மத்திய அரசு சிறப்பு விருது அறிவித்துள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா 50-வது ஆண்டாக இந்த ஆண்டு கோவாவில் வரும் நவம்பர் 20 முதல் 28 வரை நடக்க உள்ளது. இதனை ஒட்டி, இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற சிறப்பு விருதை வழங்குவதாக அறிவித்தார்.

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...