நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டம் - வணிகர்கள் கைது!

நவம்பர் 05, 2019 400

சென்னை (05 நவ 2019: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்து ஆழ்வார் திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

இதற்காக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்கள் பேரவைகளை சேர்ந்த வணிகர்கள் சுமார் 200 மேற்பட்டோர் சாலையில் பேரணியாக கையில் பதாகைகளுடன் விஜய் சேதுபதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு அவரது அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அவர்களை பாதியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

விஜய்சேதுபதி நடித்த விளம்பரம் சிறு, குறு வியாபாரிகளை பாதிப்பதாகவும், ஆன்லைன் வர்த்தகத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி துணைபோவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் போராட்டக்காரர்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...