கவுதமிக்கு பிறகு கமல் இவரோடுதான் உலா வருகிறாரோ?

நவம்பர் 07, 2019 754

பரமக்குடி (07 நவ 2019): பரமக்குடியில் நடந்த கமல் குடும்ப விழாவில் நடிகை பூஜா குமாரும் கலந்து கொண்டுள்ளார்.

நடிகர் கமலின் தந்தை சீனிவாசனின் உருவச் சிலை இன்று (வியாழக்கிழமை) பரமக்குடியில் திறந்து வைக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் கமல் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் அவரது குடும்பத்திற்கு தொடர்பில்லாத நடிகை பூஜா குமாரும் கலந்து கொண்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கமல் நடிகை சரிகாவை விவாகரத்து செய்த பின்னர் நடிகை கவுதமியுடன் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வாழ்ந்து வந்தார். அவரை பிரிந்ததும் தற்போது தனிமையில் இருப்பதாகத்தான் கூறப்படுகிறது.

எனினும் விஸ்வரூபம் படத்தில் நடித்ததிலிருந்து நடிகை பூஜா குமாருடன் கமல் நெருங்கி பழகி வருவதாக தெரிகிறது. பல நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...