ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப்பீர்கள்?)

நவம்பர் 15, 2019 756

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் தமன்னா நடித்திருக்கும் படம் ஆக்‌ஷன்.

விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்னாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார்.

அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்.

அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர்.

இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அரிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக்‌ஷன்.

விஷால் ஒன் மேன் ஷோ என்று சொல்லலாம், படம் முழுவதும் ஓடுகிறார், தாவுகிறார், பறக்கின்றார் என்றாலும் தன் ஆறடி உயரம், துறுதுறு நடிப்பால் அனைத்தையும் நம்ப வைக்கின்றார். அதிலும் இடைவேளை காட்சியில் வரும் சண்டையில் வில்லியை பிடிப்பாரா இல்லையா என்று நமக்கே பதட்டம் கூட்டுகின்றார்.

ஆம், படத்தில் ஒரு வில்லியும் உள்ளார், அசாசின்ஸ் என்று சொல்லப்படும் கூலிப்படையை சார்ந்தவர். அவரும் தன் பங்கிற்கு மிரட்ட, ஹீரோயினாகவும் விஷாலின் காதலியாகவும் வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை.

ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு ஹீரோயின் என்பது போல் ஒரு எபிசோடில் தமன்னா, அவர் விஷாலை ஒரு தலையாக காதலித்தது மட்டுமின்றி அவருக்கு உதவியாகவே இரண்டாம் பாதி முழுவதும் வருகின்றார். சிறப்பாக ஏதும் இல்லை என்றாலும் பாஸ் மார்க் வாங்குகிறார்.

படம் இஸ்தான்புல், அல்கோர்னியா, லண்டன் ஏன் பாகிஸ்தான் வரை பயணிக்கின்றது, கொஞ்சம் விஜயகாந்த், அர்ஜுன் பட சாயல் அடித்தாலும் பிரமாண்ட லொகேஷன், அதிரடி சண்டைக்காட்சிகள் என சுந்தர்.சி ரசிக்க வைத்துள்ளார்.

அதற்காக காதில் பூவிற்கு பதில் பூக்கடையே வைத்தது கொஞ்சம் ஓவர், அதிலும் கிளைமேக்ஸில் பாகிஸ்தான் கவர்மெண்ட் போலிஸிடம் விஷால் தப்பித்தது எல்லாம் சுந்தர்.சியிடம் கேட்டாலே விடை தெரியாது போல.

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை,

மொத்தத்தில் பல தோல்விகளை கண்ட அதே கதையில் வந்துள்ள இன்னொரு படம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...