இயக்குநர் ஷங்கருக்கு என்ன தெரியும்? நகைச்சுவை நடிகர் வடிவேலு பொளேர்!

நவம்பர் 23, 2019 657

சென்னை (22 நவ 2019): இயக்குநர் ஷங்கர் கிராஃபிக்ஸ் இயக்குநர் அவருக்கு நகைச்சுவையைப் பற்றி என்ன தெரியும்? என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், " 24 ஆம் புலிகேசி திரைப்படம் தடை பட இயக்குநர் ஷங்கரே காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தயாரிப்பாளராக எல்லா விசயத்திலும் தலையிடக் கூடாது. என் காஸ்ட்யூமரிலிருந்து எல்லாவற்றையும் மாற்றிவிட்டால் எனக்கு சரியாக ஒத்துப் போகதவர்களிடம் வேலை செய்ய முடியாது என்பதாலேயே 24 ஆம் புலிகேசி தடைபட்டது. இயக்குநர் சிம்புத் தேவன் ஷங்கர் சொல்வதைத்தான் கேட்பேன் என்றால் சிம்புத் தேவன் எதற்கு? என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

"நகைச்சுவை படத்தில் கிராஃபிக்ஸ் இயக்குநர் தலையிடுவது சரியானதல்ல. எனக்கு எதற்கு கிராஃபிக்ஸ். நான் என் பாடி லாங்குவேஜிலேயே நடித்து புகழ் பெற்றவன். அப்படியிருக்க எனக்கு கிராஃபிக்ஸ் உபயகோகிப்பதால் பலனில்லை" என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்துதான் நடக்கிறது. 10 பேர் இருந்துகொண்டு தமிழ் சினிமாவை கெடுத்துக் கொண்டு உள்ளனர். என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

விரைவில் அமோஜான், நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட மீடியாக்கள் மூலம் மக்களை மகிழ்விப்பேன் என்றும் வடிவேலு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...