பிரபல இளம் நடிகை கவலைக்கிடம்!

நவம்பர் 24, 2019 503

மும்பை (24 நவ 2019): பிரபல இளம் நடிகை கெஹானா வசிஸ்ட் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.

கெஹானா வசிஸ்ட் தமிழில் வந்தனா திவாரி என்ற பெயரில் அறிமுகமானார். மாடலிங் செய்து கொண்டே இந்தி, தெலுங்குத் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்த்து வருகிறார். இதுவரை 70 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் மாலத் தீவுப் பகுதியில் வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றிருந்த நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் வைத்து கெஹானா மாரடைப்பில் மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை எனத் தகவல். ஏனெனில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதே கெஹானாவுக்கு நாடித்துடிப்பு இல்லை எனத் தெரிவித்திருக்கிறார்கள் அங்கிருந்த மருத்துவர்கள்.

இவர் தமிழில் ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பிரபல டிவி சேனலில் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...