கவர்ச்சி உடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா - நடிகை மீது வழக்கு!

நவம்பர் 25, 2019 219

மும்பை (25 நவ 2019): கவர்ச்சி உடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகங்கள் அடங்கிய ஆடை அணிந்து நடிகை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஆஹா கல்யாணம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாலிவுட் நடிகை வாணிகபூர். இவர் சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ என்ற ஹிந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில் 'ஹரே ராம்' 'ஹரே கிருஷ்ணா' என்ற வாசகம் இருந்தது. புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார். இந்துக்கள் மனதை புண்படுத்தும்படியும் இந்து கடவுள்களை அவமதிப்பது போன்றும் வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ராமர் பெயர் எழுதப்பட்ட மேலாடையை எப்படி அணியலாம் என்று கண்டனங்கள் கிளம்பின.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜோஷிமார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...