வேறு பாடல்களை காப்பி அடிப்பதில் தேவாவை மிஞ்சிய அனிருத்!

நவம்பர் 28, 2019 289

சென்னை (28 நவ 2019): இளம் பட்டாளங்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறியிருக்கும் அனிருத் ஏற்கனவே ஹிட்டடித்த பாடல்களை காப்பி அடிப்பதில் மன்னன் என்று பெயர் பெற்றுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் திரைப்படம் தர்பார். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தின் சும்மா கிழி பாடல், நேற்று மாலை YouTube தளத்தில் வெளியானது.

ஒருபுறம் இந்த பாடல் ஹிட் அடித்துக் கொண்டிருந்தாலும், இது ஏற்கனவே தேவா இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்தில் வந்த தண்ணி குடம் எடுத்து என்ற பாடலின் மெட்டைப் போல் உள்ளதால் பலரும் அனிருத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அனிருத் முதல்முதலாக இசையமைத்த 3 படத்தில் வந்த வெய் திஸ் கொலவெறி பாடல், இளையராஜாவின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலை தழுவி எடுக்கப் பட்டது என்றும் இதுமட்டுமின்றி, அனிருத்தின் கோலமாவு கோகிலா படத்தில் வெளியான பாடல் ஒன்று, வெளிநாட்டு ஆல்பம் சாங்கில் இருந்து சுடப்பட்டது என்றும், அவரது பழைய குப்பைகளை தோண்டத் தொடங்கிவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...