திருமணம் ஆகாமல் கர்ப்பமான அஜீத் பட நடிகை - சொல்லும் விளக்கத்தை பாருங்கள்!

நவம்பர் 29, 2019 421

மும்பை (29 நவ 2019): திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆன நேர் கொண்ட பார்வை நடிகை அதனை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளார்.

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவர் நடிகை கல்கி. இவர் திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆனது குறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து அவர் அளித்துள்ள விளக்கத்தில், கர்ப்பம் பற்றி அறிவிக்க முதலில் பதட்டமாக இருந்தது. கண்டிப்பாக பலவிதமாக பேச்சு வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் நடிகையாகிவிட்டால் இது போன்ற விமர்சனங்களை எல்லாம் ஏற்கத் தான் வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக விமர்சனங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் தினமும் பார்த்து பேசுபவர்கள், என் அக்கம் பக்கத்தினர் ஆகியோர் நான் கர்ப்பமாக இருப்பது குறித்து அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர், எனக்கு ஆதரவாக உள்ளனர் என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...