பாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை!

நவம்பர் 30, 2019 384

சென்னை (30 நவ 2019): நடிகர் ராதாரவியை தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை சென்னை வந்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி பா.ஜ.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது நடிகை நமீதா தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசனில் பங்கேற்ற நடிகை காயத்ரி ரகுராமும் பாஜகவில் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பிக்பாஸ் பிரபலம் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...