மிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொடங்கிய படப்பிடிப்பு!

டிசம்பர் 02, 2019 427

சென்னை (02 டிச 2019): பல்வேறு தகவல்களுக்கு இடையே சரவணா ஸ்டோர் உரிமையாளர் தனது திரைபடப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளமபரப் படங்களில் நடித்து வந்தார். அப்போதே அவர் தியுரையுலகில் நடிகராக விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக 'மிஸ் இந்தியா' பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...