நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி!

செப்டம்பர் 15, 2015 1248

சென்னை: நடிகர் நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு விஷால் அணியை சேர்ந்த நடிகர் நாசருக்கும், சரத்குமாருக்கும் போட்டி நிலவுகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக நடிகர், நடிகர்களின் வீடுகளுக்கு சென்று நாசர் ஆதரவு கேட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் நாசருக்கு நேற்றிரவு ரத்த அழுத்தம் அதிகமானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...