சித்ராவின் முகத்தில் இருந்த நகக்கீறல்கள் யாருடையது? போலீசார் பரபரப்பு தகவல்

1592

சென்னை (10 டிச 2020): விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டார் .

வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் மரணம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த கணவரும் உடனிருந்தார். அவரை வெளியே அனுப்பிவிட்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சித்தராவின் முகத்தில் இருந்த காயங்கள் அவரது மரணம் உண்மையிலேயே தற்கொலைதானா? என்ற சந்தேகத்தை எழுப்பியது. இதனை தொடர்ந்து சித்ராவுடன் அறையில் தங்கியிருந்த அவரது கணவர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று கூராய்வு செய்யப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என போலீசார் தெரிவித்துள்ளனர். சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டார் எனவும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீரல்கள் அவருடையதுதான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.