நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு – அப்பல்லோவில் அனுமதி!

448

ஐதராபாத் (25 டிச 2020): நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமக ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினி அண்ணாத்தே படப்பிடிப்பில் இருந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ரஜினிக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. எனினும் கோவிட் பாதிப்பு இல்லை என உறுதியான நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்தார்.

இந்நிலையில் இன்று அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகவே ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். எனினும் வேறு எந்த அறிகுறிகளும் இல்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவில் எகிறும் கொரோனா பரவல் - ஒரேநாளில் இவ்வளவா?

ஏற்கனவே ரஜினிகாநத் சிறுநீரக பாதிப்பு உள்ளவர் என்பதால் மருத்துவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டி வலியுறுத்தியிருந்தனர் என்பதாக கடந்த அக்டோபரில் கூறியிருந்தார்.  குறிப்பாக கோவிட் காலங்களில் கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று மருத்துவர்கள் ரஜினிக்கு அறிவுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.