இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல நடிகை!

1118

பெங்களூரு (13 பிப் 2021): பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

சஞ்சனா கல்ராணி போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்தார். தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.

இந்நிலையில் சஞ்சனாவுக்கு அஜீஸ் பாஷா என்பவருடன் திருமண நிச்சயதார்ததம் நடந்துள்ளதும், அவர் முஸ்லிமாக மதம் மாறிய தகவல்களும் வெளிவந்தது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

இது இப்படியிருக்க தற்பொது அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததையும், மதம் மாறியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அவரது சமூக வலைதளத்தில் பதிந்துள்ளார். ஆனால் என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.