பிக்பாஸ் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

858

பெங்களூரு (25 ஜன 2021): பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெயஶ்ரீ ராமைய்யா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கன்னட சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று இவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மிக நீண்ட காலமாகவே இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் விளைவாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  இரண்டாவது திருமணம் - மனம் திறந்த நடிகை மீனா!

ஜெயஶ்ரீ ராமைய்யாவின் தற்கொலை அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.