பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஒளிவு மறைவு இல்லையாம் – நாள் முழுவதும் பார்க்கலாம்!

968

மும்பை (10 ஜூலை 2021): ஓடிடித்தளம் மூலம் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியை முன்புபோல் எடிட் செய்து காட்டாமல் நாள் முழுக்க நடப்பவைகளை லைவ்வாக பார்க்கமுடியுமாம்.

பலமொழி ரசிகர்களை கவர்ந்துள்ள ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ். ஏராளமான பார்வையாளர்களை கொண்ட இந்நிகழ்ச்சி இனி ஓடிடி மூலமாக ஒளிப்பரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு தான் டிவியில் ஒளிப்பரப்பாகும். இந்நிகழ்ச்சியை முதல் ஆறு வாரங்களுக்கு வூட் ஆப்பின் மூலம் வியாகாம் 18 ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது. பிக்பாஸ் ஓடிடி என்ற தலைப்பில் முதன்முதலாக இந்த முயற்சி எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இதைப் படிச்சீங்களா?:  காஷ்மீர் ஃபைல்ஸ் மோசமான திரைப்படம்தான் - நடுவர்கள் குழு திட்டவட்டம்!

வரும் ஆகஸ்ட் 2021 முதல் வூட் ஆப்பில் ஒளிப்பரப்பாகும் இந்நிகழ்ச்சியை முன்புபோல் எடிட் செய்து காட்டாமல் நாள் முழுக்க நடப்பவைகளை லைவ்வாக பார்க்கமுடியும். அதேபோன்று பிரத்யேக காட்சிகளை கண்டுகளிக்க முடியும் என கூறப்படுகிறது. ஓடிடியில் ஒளிப்பரப்பான பிறகு பிக்பாஸ் சீசன் 15-ஐ கலர்ஸ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

தமிழிலும் வரும் பிக்பாஸ் சீசனில் ஓடிடி முறை கொண்டு வரப்படுமா என கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.