கர்நாடகா : "தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக நீரை திறந்துவிட முடியாது என்றும், இதுதொடர்பாக பதிவுச் செய்யப்பட்டுள்ள வழக்கை கர்நாடக அரசு சட்டரீதியாக சந்திக்கும்" என்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியுள்ளார். மேலும்  "மேகதாதுவில் அணைகட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி : நாட்டின் தலைநகரான டெல்லியில், "ஊழல் மலிந்த துறையாக காணப்படும் காவல்துறையை சரிசெய்ய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு டெல்லி காவல்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் பிரதமர் மோடிக்கு புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை : இஸ்லாமியர்கள் கொண்டாடும் மொகரம் பண்டிகைக்கான அரசு விடுமுறையை இந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதிக்குப் பதில் 24-ஆம் தேதியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அ.தி.மு.க வினர் 1006 பேருக்கு கரூர் மாவட்ட ஜெ பேரவை சார்பாக இலவசமாக தலை கவசம் வழங்கி அசத்தியுள்ளார் காமராஜ்.

பீகாரில் நடைபெற்று வரும் தேர்தலில், மோடி பங்கேற்கவிருந்த மூன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோடியின் பிரச்சாரக் கூட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கான மக்கள் ஆதரவு இல்லாததால் மோடியே கூட்டத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

 மு.க. ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் பயணத்தின் 2-வது கட்டம் நீலகிரியில் தொடங்கி கடலூரில் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக- கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல் துறையினருக்கும் துப்பாக்கிச் சண்டை. காயமடைந்த மாவோயிஸ்டுகள் தப்பி ஓட்டம் ஆயுதங்கள் பறிமுதல். வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை.

புது டெல்லி : "ஆதார் அட்டை வாங்குவதும், வாங்காததும், ஆதார் அட்டையை பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் என்றும், ஆதார் அட்டைக்கும், மத்திய அரசு வழங்கும் மானியங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தெரிவித்துள்ளது.

பிகார்(14 அக். 2015): தேர்தல் பிரச்சாரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது. எனினும் காயங்களின்றி லாலு பிரசாத் யாதவ் உயிர் தப்பினார்.

- செய்தி விரிவாக

கொச்சி : "கேரளத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் இணைந்து மாநிலத்தில் மதவாதச் சூழலை ஏற்படுத்த முயலுகின்றனர். அதற்காக அவர்கள் மத, ஜாதி அமைப்புகளை தூண்டி விடுகின்றனர். அவர்களின் முயற்சி ஒருபோதும் கேரளாவில் வெற்றிபெறாது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள மாநில உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...