தேமுதிவுடன் கூட்டணி வைப்பதற்காக கெஞ்சும் அளவிற்கு சென்று தமிழக பாஜக தனது மரியாதையை இழந்துவிட்டது கடுமையான தாக்கு - சுப்ரமணியன் சுவாமி.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். அவர்கள் பெருந்தன்மையுடன் அதனை ஏற்றுக்கொண்டார் .எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைபடி 6 சதவீதம் உயர்வு.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த தெருவோர குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சென்னை சிறுமி ஹெப்சிபா வெற்றி பெற்றுள்ளார்.

டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின், இந்தியா வரும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக மத்திய சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தானில், 'ஹோலி' பண்டிகை கொண்டாட்டத்தின் போது, கள்ளச் சாராயம் குடித்து, இந்துக்கள், 24 பேர் பலியாகியுள்ளனர்.

கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் இனி பேச்சு நடத்த மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் நேற்று நடைபெற்ற தற்கொலைப் படைத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு சம்பவத்தில் 34 பேர் பலியாயினர்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்ற ஜெயலலிதாவிற்கு, சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பயமாக இருக்கிறது என சீமான் கூறியுள்ளார்.

உளுந்துார்பேட்டை அருகே அரசூரில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி டெம்போ, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...