நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து இல்லை – சமரச முயற்சி!

1145

சென்னை (19 ஜன 2022): நடிகர் தனுஷ் நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ உள்ளதாக இருவருமே அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இருவரையும் இணைக்க குடும்பத்தினர் சமரச முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா 18 ஆண்டுகாலம் வாழ்ந்து தற்போது பிரிந்து வாழவுள்ளதாக அறிவித்தனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தனுசை ஐஸ்வர்யா நிரந்தரமாக பிரிந்ததாக சொல்கிறார்கள். அதன்பிறகு ஐஸ்வர்யா தனது 2 மகன்களுடன் போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில்தான் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ்- ஐஸ்வர்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை முடிவுக்கு கொண்டுவர உறவினர்களும், நண்பர்களும் கடந்த சில மாதங்களாக ஓசையின்றி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர். இருவரையும் அழைத்து பேசினார்கள். ஆனால் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மீண்டும் இருவரையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, இருவரும் விவாகரத்து செய்துகொள்ளவில்லை இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுதான். தனுஷிடம் அறிவுரை கூறியுள்ளேன் குடும்பப் பிரச்சனைதான் சரியாகும்.” என்பதாக தெரிவித்துள்ளார்.