நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது.

மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.

ஹாட் நியூஸ்:

தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து...

குஜராத்தில் முஸ்லிம் வாக்குகளைப் பிரித்த உவைசி!

ஆமதாபாத் (08 டிச 2022): குஜராத்தில் வெல்ல முடியாது என்ற நிலையில் வேண்டுமென்றே வேட்பாளர்களை நிறுத்தி, அசாதுத்தீன் உவைசி முஸ்லிம் வாக்குகளை பிரிக்கும் நிலை தற்போதும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக முஸ்லிம் வாக்குகளை உவைசி பிரித்துவிடுவார்...

துபாய் ஷாப்பிங் திருவிழா டிசம்பர் 15 ல் தொடக்கம்!

துபாய் (06 டிச 2022): துபாய் ஷாப்பிங் திருவிழா இம்மாதம் 15ம் தேதி தொடங்குகிறது. ஷாப்பிங் திருவிழாவை ஒட்டி, இம்முறையும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன துபாய் ஷாப்பிங் திருவிழா ஜனவரி 15 முதல் ஜனவரி 29...