போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகை கைது – சிக்கும் அரசியல் பிரபலங்கள்!

Share this News:

பெங்களூரு (06 செப் 2020): போதைப் பொருள் கடத்தலில் பிரபல கன்னட நடிகை ராகிணி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரைப்பட பிரபலங்களுக்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கன்னட திரை உலகின் பிரபல நடிகை ராகிணி திவேதியின் நண்பரும், அரசு ஊழியருமான ரவி சங்கரை கைது செய்தனர். இதையடுத்து நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், 2 பேரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து கடந்த 4-ந்தேதி ராகினி திவேதியை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். தற்போது நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஆப்பிரிக்கா நாட்டு வாலிபர் லோயம் பெப்பர் சம்பாவை(வயது 33) கைது செய்துள்ளனர். அவர் ஆப்பிரிக்காவில் இருந்து போதை பொருட்களை கடத்திக் கொண்டு வந்து உள்ளூர் நபர்கள் மூலம் சப்ளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவர், ரவிசங்கருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் .

கன்னட திரை உலகத்தினர் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு ரவி சங்கர் மூலமாக போதைப்பொருட்களை ‘சப்ளை’ செய்து வந்துள்ளார். இதுதவிர முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கும் லோயம் பெப்பர் சம்பா போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். இவ்விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply