பிரபல நடிகை சாலை விபத்தில் மரணம்!

பெங்களூரு (27 மே 2020): பிரபல ரியாலிட்டி ஷோவின் மாடலும் சின்னத்திரை நடிகை மெபினா மைக்கேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மெபினா மைக்கேல் செவ்வாய்க்கிழமை மாலை மாண்டியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 75ல் நாகமங்கள தாலுகாவில் உள்ள தேவிஹள்ளி அருகே ஒரு டிராக்டர் மோதியதில் அவர் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. .

மெபினா, தனது இரண்டு நண்பர்களுடன் பெங்களூருவில் இருந்து கோடகு மாவட்டத்தில் உள்ள சோம்வார்பேட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. அந்த காரில் மெபினாவுடன் நான்கு பேர் பயணித்துள்ளனர். அனைவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதைப் படிச்சீங்களா?:  தவறான முடிமாற்று அறுவை சிகிச்சையால் இளைஞர் மரணம்!

விபத்து ஏற்பட்டபோது இதனை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் அவர்களுக்கு உதவ சென்றதோடு போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

பலத்த காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும் மெபினா உயிரிழந்துள்ளார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கபப்டடு வருகிறது.

இது குறித்து பெல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.