சிம்புவுக்கு ஜனாதிபதி விருது!

408

சென்னை (18 செப் 2022): வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சிம்புவுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட வேண்டும் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள வெந்து தனிந்தது காடு திரைப்படம் இந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  காஷ்மீர் ஃபைல்ஸ் விவகாரம் - இஸ்ரேல் தூதரின் எதிர்வினைக்காக வெட்கப்படுகிறேன் - நடவ் லாபிட்,!

இந்நிலையில் படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் படக்குழுவினர் படத்திற்கு வந்துள்ள வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய படத்தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், சிம்புவை வெகுவாக பாராட்டினார். மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்தற்காக ஜனாதிபதி விருது கிடைக்கும் என்று உறுதிபட கூறியுள்ளார்.