கந்தசஷ்டி கவசம் – நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட்!

சென்னை (22 ஜூலை 2020): கந்தசஷ்டி கவசம் மற்றும் கறுப்பர் கூட்டம் யூடுப் சேனல் குறித்து நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என ட்விட்டரில் திடீர் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், கருப்பர் கூட்டத்தின் வீடியோவை டெலிட் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுளான முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் கொச்சையாக சித்தரித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் காணொலி ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோ பதிவிற்கு இந்து அமைப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் கறுப்பர் கூட்டம் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, வேளச்சேரி செந்தில்வாசன்(49), நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேந்திர நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடூப் சேனல் அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ரஜினி பரபரப்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில். “கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!!” என குறிப்பிட்டுள்ளார்.

ஹாட் நியூஸ்:

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...