அது உண்மைதான் – நடிகர் சுஷாந்த் தற்கொலை: உண்மையை போட்டுடைத்த நடிகை!

மும்பை (23 ஜூன் 2020): தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்ததையும் பின்பு இருவரும் பிரிந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை ரியா.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சமீபத்தில் மும்பை போலீசார் நடிகையும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியுமான ரியா சக்ரபோர்த்தியிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் இருவரும் காதலித்தது உண்மை தான் என்றும், நவம்பரில் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்ததாகவும் ரியா ஒப்புக்கொண்டார். அதேவேளை இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்ததாகவும் ரியா தெரிவித்துள்ளார்..

மேலும் போலீசார் அவரது மொபைல் போனை சோதனை செய்ததில் இருவரும் பரிமாறிக்கொண்ட வீடியோக்கள், சாட்கள் இருந்ததாக தகவல்கள் வெளியானது. ரியா உட்பட சுமார் 13 பேரிடம் போலீசார் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் ஒரு சிலரிடம் விசாரணை நடத்திட அவர்கள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பீஹார் நீதிமன்றத்தில் நடிகை ரியா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பீஹார் மாநிலம் முசாபர்பூர் பகுதியை சேர்ந்த குந்தர் குமார் என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணை வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது.

அதுமட்டுமல்லாமல் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர், ஆதித்ய சோப்ரா, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேரின் மீது பீஹார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ஒன்றிய பட்ஜெட்டில் வருமான வரி வரம்பு அதிகரிப்பு!

புதுடெல்லி (01 பிப் 2023): 2023-2024 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், புதிய வரி முறையில் வருடத்திற்கு ரூ....

முஹம்மது நபியை இழிவு படுத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

போபால் (30 ஜன 2023): முஹம்மது நபியை இழிவு படுத்தும் வகையில் கோஷம் எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 25 ஆம் தேதி அன்று ஷாருக்கான்...

சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய குழந்தை மரணம்!

ரியாத் (29 ஜன 2023): சவூதி அரேபியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஆறுமாத இந்தியக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஹசிம் மற்றும்...