பிக்பாஸ் தர்ஷன் மீது நடிகை ஷனம் ஷெட்டி போலீசில் பரபரப்பு புகார்!

624

சென்னை (31 ஜன 2020): பிக்பாஸ் புகழ் தர்ஷன் மீது நடிகையும் மாடலுமான ஷனம் ஷெட்டி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் 3 சீசனில் பலரது பாராட்டை பெற்றவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த இவருக்கும், ஷனம் ஷெட்டிக்கும் காதல் இருந்து வந்ததாக ஷனம் ஷெட்டி பல பேட்டிகளில் தெரிவித்தார்.

தர்ஷனுக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிறைவு விழாவிலேயே கமல்ஹாசன் அந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னும் அந்த படம் துவங்கவில்லை. அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இதைப் படிச்சீங்களா?:  புனித மக்காவில் உம்ரா செய்யும் நடிகர் ஷாரூக்கான்!

இந்நிலையில் ஷனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால், தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுப்பதாக ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் இருவரது ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.