நடிகை ஷக்கீலா மரணம்? – ஷக்கீலா வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை (30 ஜூலை 2021): நடிகை ஷகீலா இறந்துவிட்டார் என்று வெளியான வதந்திக்கு நடிகை ஷக்கீலாவே பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சமூக வலைதளத்தில் நடிகை ஷக்கீலா இறந்துவிட்டதாக யாரோ ஒருவர் கேரளாவில் வெளியிட்ட தகவல் தீயாய் பரவி அவரது ரசிகர்களை அதிர்ச்சியுறச் செய்தது. இந்நிலையில் அது பொய்யானதகவல் என்பதை அவரே வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் இதோ நலமாக இருக்கிறேன், மிகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.. எனக்காக ஆதரவளித்த கேரள மக்களுக்கு மிக்க நன்றி. தவறான செய்தியைக் கொடுத்த நபருக்கும் மிக்க நன்றி. அவர் காரணமாக மக்கள் என்னை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளனர் “என்று ஷகீலா கூறியுள்ள்ளார்.

ஹாட் நியூஸ்: