வைரலாகும் அம்மன் சீரியல் நடிகையின் ஆபாச புகைப்படம்!

3810

சென்னை (17 ஜூலை 2021): தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட, சின்னத்திரை நடிகைகளுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இதனைத் தக்க வைத்துக் கொள்ள, வெள்ளித்திரை நடிகைகள் அளவுக்கு சீரியல் நடிகைகளும் சமூக வலைத் தளங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இதில் சில சீரியல் நடிகைகள் கவர்ச்சி ஆயுதங்களைக் கையில் எடுக்கும் நிகழ்வும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் ‘கலர்ஸ் தமிழ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அம்மன்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகும்.

இதில் நடிக்கும் பவித்ரா கௌடா அமல்ஜித் ஆகியோர் முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலில், ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இதில் காந்தாரி என்ற கதா பாத்திரத்தில் நடித்து வருபவர் சுபா ரக்ஷா. கர்நாடகத்தை சேர்ந்த இவர் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில் ‘அம்மன்’ சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஆடையே அணியாமல், வெறும் ஒரு தொப்பியுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகைகள் இழுத்துப் போர்த்திக் கொண்டு கடவுளின் கதா பாத்திரங்களில் நடிக்கும்போதே, இப்படி அரைகுறை ஆடைகளுடன் தோன்றுவது தார்மீக அடிப்படையில் சரியானதா என்பது நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது.