கோவை (07 மர்ச் 2018): கோவை பாஜக அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

திருப்பத்தூர் (06 மார்ச் 2018): திருப்பத்தூரில் பெரியார் சிலையை உடைத்த பாஜக பிரமுகரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை (06 மார்ச் 2018): தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா கூறிய கருத்துக்கு தமிழிசை சவுந்திரராஜன் வழக்கம்போல் அவர் கருத்துக்கும், பாஜகவுக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.

பெலோனியா (06 மார்ச் 2018): திரிபுராவில் சிபிஎம் ஆட்சி முடிவுக்கு வந்ததை அடுத்து அங்கு மூன்றே நாட்களில் 1000 வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

டெல்லியில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது பாங்கு சொல்லப்பட்டதால் பேச்சை நிறுத்தினார். திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றியை பாஜக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி பேசும்போது மாலை நேர தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது.

அப்போது பேச்சை நிறுத்திய மோடி , பாங்கு சொன்ன பிறகு பேசுவதாக கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...