சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று!

330

ஐதராபாத் (09 நவ 2020): பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாமர மக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள், மந்திரிகள், பல்வேறு திரைபிரபலங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அறிகுறிகள் இல்லாத நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கடந்த 5 தினங்களுக்கு முன்பு வரை தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் நான் மீண்டு வந்ததை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் தமன்னா, அர்ஜுன் கபூர், மலைகா அரோரா, ஜெனிலியா, ராஜமெளலி உள்ளிட்ட பலரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது..