இந்தி தெரியாது போடா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவனின் டி.சர்ட்!

சென்னை (05 செப் 2020): இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை விமான நிலையில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கடுமையாக கண்டித்திருந்தனர்.

இந்நிலையில் இந்திக்கு எதிராக தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது. அதில் குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர், கிரிஸ் மற்றும் நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.

இதற்காக யுவன் டீ சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் இந்த டி சர்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது. பலர் யுவனின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

அதேபோல யுவனின் அருகில் நடிகர் கிரீஸ் அணிந்திருக்கும் டி சர்ட்டில் ‘இந்தி தெரியாது போடா’ என்கிற வாசகமும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறனும், விமான நிலையத்தில் இந்தி தெரியாததால் அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: