விருதை திருப்பி அளிக்கிறேன் – வைரமுத்து திடீர் அறிவிப்பு!

1011

சென்னை (29 மே 2021): கேரளாவின் மிக உயரிய விருதான ஓ.என்.வி. விருதை திருப்பி அளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்துக்கு ஓ.என்.வி., விருது வழங்க கூடாது சின்மயி மாறும் நடிகை பார்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மலையாள கவிஞரும், பாடலாசிரியரும் மற்றும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி., குறுப்புவின் பெயரில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக கேரளாவை சேராத வைரமுத்துவிற்கு இந்தாண்டு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெறுவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக பாடலாசிரியர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினும் விருது குறித்து தனது வாழ்த்துக்களை வைரமுத்துவிற்கு தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமான பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேபோல வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மறு ஆய்வு செய்வதாக ஓஎன்வி பண்பாட்டு குழு அறிவித்தது. இதற்கிடையே விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அறிவித்துள்ளார்.