தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்கள் போராட்டத்தை தொடர வேண்டாம்

இலங்கை : இலங்கையில் நாளை நடைபெறுகின்ற "நாடாளுமன்ற தேர்தலில் தனது கூட்டணி கட்சி வெற்றி பெற்றாலும் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்க்க முடியாது" என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திட்டவட்டமாக கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மூன்று நாட்களுக்குள் சரண்டர் ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 3000 டாஸ்மாக் கடைகளை மூடி விடலாம் என்றும் அதற்குப் பதில் எலைட் கடைகளை அதிகரிக்கலாம் என்றும் காவல்துறை உளவுப்பிரிவு அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை : "மக்களுக்கான அரசியலில் இருந்து தன்னை பலரும் விலக்க முயற்சிக்கின்றனர். ஆனாலும், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் எதுவும் இல்லை" என்று இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும் "அரசியலுக்கு வந்தது முதல் இதுவரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் : வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியின் ஜன்னல் கதவினை உடைத்து பீரோவில் இருந்த ஒரு லட்சம் பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புள்ள கணினி, ஹார்டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பள்ளி முதல்வர் ஜேம்ஸ் ஜான் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் காய்கறிகளில் அதிக அளவு நச்சு தன்மை இருப்பதாக கூறி அதை தடை செய்யும் விதமாக தமிழக கேரளா எல்லையான அமரவிளையில் சிறப்பு சோதனை சாவடியை திறக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்: குஜராத் மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 45 பேர் பலியாகி உள்ளதாகவும், சுமார் 5 ஆயிரம் பேர் தங்களது இருப்பிடங்களை இழந்து தவிப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புது டெல்லி : "தி நேஷனல் ஹெரால்டு" பத்திரிகையின், 1,400 கோடி ரூபாய் பங்குகளை தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்ட விவரத்தை, வருமான வரித்துறைக்கு தெரிவிக்காதது தொடர்பாக ராகுல் மற்றும் சோனியாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.