புனே : போலி சான்றிதழ் வழக்கில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியின் சட்டத்துறை அமைச்சர் தோமரைப் போன்று மகாராஷ்டிரா பாரதீய ஜனதா கட்சியின் நீர்வளத்துறை அமைச்சர் ஒருவரும் போலி கல்வி சான்றிதழ் புகாரில் சிக்கியுள்ளார்.

செய்தி விரிவாக..

கோழிக்கோடு : கேரளாவிலுள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்களுக்கும் மத்திய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியான சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி விரிவாக...

புது டெல்லி : போலி சான்றிதழ் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்ட அமைச்சர் தோமரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆத்தூர் : ஆத்தூர் அருகே தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்து விழுந்தது. 13 பேர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து 70 கிமீ தொலைவில் உள்ள நல்லாறு அருகே காணாமல் போன இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் விழுந்துள்ளதாக தகவல்! 10 ரோந்து கப்பல்களும், 2 ஹெலிகாப்டரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் இரயில் தண்டவாளத்தில் தலை வைத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை; 9-ஆம் வகுப்பு படிக்கும் இவர்கள் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல் - இறந்தவர்களின் சடலங்களைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கெய்ரோ: எகிப்தில் சையத் துறைமுக நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் 2012-ஆம் ஆண்டு நடந்த வன்முறை வழக்கு : 11 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

செய்தி விரிவாக...

புது டெல்லி: நாடு முழுவது‌ம் இயங்கிவரும் 4470 அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன!

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உள்பட 38 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது!

சேலம்: சேலம் அருகே அம்மன் சிலை மீது கால் வைத்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக  புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவராஜ், மற்றும் வெங்கட் என்ற இரண்டு நபர்கள் கைது - காவல்துறை அதிரடி நடவடிக்கை!