சென்னையில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் முதலில் தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களிலும் மேலும் அண்ணாதொழில்நுட்ப பல்கலைக்கழகம்- சென்னை என்று மொத்தம் 6 பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன.
இந்த 6 பல்கலைக்கழகங்களையும் இணைத்து ஒரே அண்ணா பல்கலைக்கழகமாக முன்பு போல ஆக்க தமிழக அரசு முடிவு எடுத்து சட்டசபையில் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அனைத்து பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் என்னென்ன இருக்கின்றன. எந்த வகையில் இணைக்கலாம் என்பது குறித்த தகவல்களை திரட்டி அரசுக்கு அறிக்கை கொடுக்க நகராட்சி நிர்வாகம் மற்றும் தண்ணீர் விநியோகத்துறை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் உயர்கல்வித்துறை செயலாளர் கண்ணன், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ரமேஷ் சந்த் மீனா, சட்டத்துறை செயலாளர் ஜெயச்சந்திரன், அரசு செயலாளர்(செலவு) எஸ்.கிருஷ்ணன், ஆகியோர் உறுப்பினர்களாகவும் உயர்கல்வித்துறை இணைச்செயலாளர் உமா மகேஸ்வரி உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-க.கா.செ
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|