இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி கல்லூரி இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு!

இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் பி.எட் மாணவர் சேர்க்கை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரி செயலாளர் லெனின்குமார். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலை கழகத்துக்கு எதிராக மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் அவர்,

"இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின்(இக்னோ) பங்கு கல்லூரியாக ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரி உள்ளது. இக்னோவில் பி.எட் படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறும் மாணவர்கள் எங்கள் கல்லூரி உள்பட 20 கல்லூரிகளில் படிக்க அனுமதிக்கப்படுவர். 2012 ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எட் விண்ணப்பங்களை இக்னோ மண்டல இயக்குனர் எங்கள் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். அதில் 250 விண்ணப்பங்கள் விற்பனையானது.

நாங்கள் ஒரு மாதமாக நடத்திய இலவச பயிற்சி வகுப்பில் 220 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் இக்னோ நடத்திய பொது நுழைவுத்தேர்வில் 110 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களை, எங்கள் கல்லூரியில் படிக்க இக்னோ அனுப்பி வைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் எங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து இக்னோ பதிவாளர் 28.11.2011 அன்று உத்தரவிட்டார்.

கல்லூரிக்கு நோட்டீசு வழங்காமல் விசாரணை எதுவும் நடத்தாமல் மாணவர் சேர்க்கையை ரத்து செய்தது சட்டவிரோதம். எனவே மாணவர் சேர்க்கையை ரத்து செய்து இக்னோ பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை அனுப்பவும் உத்தரவிட வேண்டும்."

என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவர் சேர்க்கையை ரத்து செய்து இக்னோ பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)