இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி!

அடுத்த கல்வியாண்டு முதல் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி!

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சார்ந்த கல்லூரிகளில் அடுத்த ஆண்டு முதல் சேர உள்ள அனைத்து ஊனமுற்ற மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் எந்த கல்லூரியில் படித்தாலும் அந்த கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் இருந்துசேர உள்ள ஊனமுற்ற மாணவ&மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சென்னை பல்கலைக்கழகத்திலும் அதன் அங்கீகாரம் பெற்ற அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் அனைத்திலும் அடுத்த கல்வி ஆண்டில் இருந்துசேர உள்ள அனைத்து மாற்றுத்திறன் கொண்ட மாணவ&மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட உள்ளது. இந்த முடிவு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டது.

-க.கா.செ

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)