ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளதாவது:
"கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2 ஆம் ஆண்டு ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு முடிவு இன்று (31/12/2011 சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்து, பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வு எழுதிய மாணவ- மாணவிகள் தாங்கள் படித்த நிறுவனத்தில் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து, தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்."
மேற்கண்டவாறு தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
- க.கா.செ
| அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|