இனி தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் மாலை 4.10 க்குப் பதிலாக 4.45 வரை வகுப்புகள் நடத்தப் பட வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி வழக்கு காரணமாக பள்ளிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட 35 நிமிடங்கள் கூடுதலாக வகுப்புகள் நடத்தப் படும் என்று தெரிகிறது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|