மதுரை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்டதின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து மதுரை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு, உள்ளாட்சி நிர்வாகங்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியமாக கொடுக்கப்படும்.
இதற்குத் தேவையான தகுதி, விண்ணப்பபடிவம் மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகல்வித்துறை, தொடக்ககல்வித்துறையின் அனைத்து அலுவலகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. அந்தப் படிவத்தின் மாதிரியில் விண்ணபத்தைத் தட்டச்சு செய்து உரிய சான்றிதழ்களுடன் ரூ.5 ஸ்டாம்பு ஒட்டிய சுய முகவரியுடன் கூடிய கவருடன் வருகிற 15-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு தபால் மூலமாகவோ,நேரடியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|