இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: கல்வி பள்ளிக்கூடம் சமச்சீர் கல்வி: ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி!

சமச்சீர் கல்வி: ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி!

சமச்சீர் கல்வி: ஆசிரியர்களுக்குச் சிறப்பு பயிற்சி!தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வருகிற மார்ச் மாதம் நடக்க உள்ளது. இந்த கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வி அமலில் உள்ளது. இதனால் பாடங்களைப் புரிந்து கொள்வதில் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு எளிதில் பாடங்களை புரிய வைப்பதற்காக ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி 5 நாட்களுக்கு நடக்கிறது. இதில் புதிய பாடப்புத்தகத்தில் கடினமாக உள்ள பாடங்களை நன்றாக புரிந்துகொள்ளுதல், பின்தங்கிய மற்றும் தோல்வியுறும் மாணவர்களைத் தேர்ச்சி பெற சிறப்பு முயற்சி எடுத்தல், மாணவர்கள் முழுமதிப்பெண்கள் பெற சிறப்பு பயிற்சி அளித்தல் ஆகியன பற்றி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எஸ்.நாகராஜமுருகன் கூறியதாவது:

"மதுரை மாவட்டத்தில் உள்ள 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் வருகிற பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர்களுக்குப் பாட வாரியாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிகள் வருகிற 21 ஆம் தேதி வரை நடக்கின்றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, கள்ளர், ஆதிதிராவிடர், நகராட்சி, அரசு நிதியுதவி, சுயநிதி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் வேலைபார்க்கும் அனைத்து பட்டதாரி மற்றும் முதுகலை 10 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களுக்குப் பயிற்சியின்போது விடுமுறையோ, அனுமதியோ கிடையாது. அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வேலைபார்க்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். இதற்காக ஆசிரியர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதுரை கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு மதுரையில் உள்ள பள்ளிகளிலும், மேலூர் கல்வி மாவட்டத்தில் வேலைபார்க்கும் ஆசிரியர்களுக்கு மதுரை, திருப்பாலை ஆகிய இடங்களிலும், உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது."

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: