பத்தாம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் 4 ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் கீழ்கண்ட அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் 4 - தமிழ் முதல்தாள்
ஏப்ரல் 9 - தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16 - கணிதம்
ஏப்ரல் 19 - அறிவியல்
ஏப்ரல் 23 - சமூக அறிவியல்
ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்க இருக்கும் இப்பொதுத்தேர்வில், தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளதாகவும் பள்ளிக் கல்வி தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|